...

27 views

சாளர மழை
சாளர மழைக்கு
சிறிய இடைவெளி..

அவ் இடைவெளியை நிரப்புது
சாலையோரமாய் சின்னஞ்சிறிய
நடைப்பயணம் ஒன்று..

அலைபேசியை தவிர்த்தப்படி
அங்குல அங்குலமாக நடந்த காட்சிகள்
விழித்திரை படமெடுத்துக் கொள்வதால்..

படமெடுக்க சிரமமில்லை
அதை ரசனையின் சேவகன்
செவ்வனே செய்கிறது ..

சேவகனின் செயலை
வரிகள் கோர்வையாக கோர்க்க..

ம்ம்ம் கொட்டி கேக்குது
கவிதை லயிப்புகள்..

அதில் மிதந்த வண்ணமாக
இருக்கும் கற்பனையின் கூட்டணிகள்..