...

3 views

நீ எங்கே ...

பொம்மைக்கனவுகளை சிதைத்துவிட்டு
நிகழ்கால உண்மைநிலைக்கும்
எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில்
கிடந்து அடுத்ததாக
ஓரடிகூட எடுத்து வைக்க முடியாமல்
வாழ்திருந்தவளின் தற்போதைய
நிலைபற்றி உங்களுக்கு எந்தவித
கவலைகளும் வேண்டாம்.....

அவளாக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்துபார்க்கப்போவதில்லை
ஒரு வேளை வாழ்ந்து பார்த்தால்கூட
அவள் போல நீங்கள் இருந்து விடப்போவதுமில்லை......பிறகெதற்காக
இந்த அவசர உலகில் அவளைப்பற்றி
யோசித்து நீங்கள்
தங்கிநிற்கிறீர்கள்......

அவள் இப்பொழுது அவளாகமட்டும்தான் வாழ்கிறாள் எப்பொழுதும் அவள்அவளுக்காக
மட்டும்தான் வாழ்ப்போகிறாள்
நீங்களும் உங்களுக்காக
மட்டும் வாழுங்கள் அவளை விட்டு விடுங்கள்...

#இசைவிழி
© Isaivily