...

1 views

தவறியக் கைக் குட்டை
தவறியக் கைக்குட்டையைக் கூட மீண்டும் கைகொள்ளத் துடிப்பவர் - கண்முன்னே களவு போன கனவுகளைத் தேடித் தொலைவதில் வியப் பென்ன?
காதல் குழைத்து கண் வரைந்த ஓவியந்தனை கால நதி கலைத்த பின்னும் மனத்திரையில் வண்ணம் மாறாதிருப்ப தென்ன?
வழிந்தக் குருதி நிறம் மாறி ஆறிய போதும் - வடுக்கள் மறுப்பதென்ன வலி மறந்திட !
இறந்த நிஜங்களால் நிரம்பிய நெஞ்சம் துடிப்பதேன் நொடியும் தூங்கா நினைவுகள் அழித்திட !
உணர்வுகள் உள்ளிருந்தும் சதையோடு உயிரிருந்தும் மறுப்பதேன் "இது" உலகோடு உறவாடிட!

© Dr. Rajina Banu A