...

6 views

போர் வீரன்
பருவ நிலை பசி என எல்லாவற்றையும் துறந்த போர் வீரன், பட்டாளத்திலிருந்து பருவ விடுமுறைக்கு பிறந்த ஊரை அடைந்தான்...
போர் வீரன் அல்லவா!
பந்தி விருந்து தான் வீட்டில் எந்நேரமும்,
வயிற்று பசியை போக்கிய தாய்க்கு,
மகனின்
வாலிப பசியை போக்க ஆசை!!!
பதின் பருவம் முடிந்த,
பட்டப்படிப்பு முடித்த பருவ மங்கை ஒருத்தியை பெண் பார்க்க,
பக்குவமாய் அரங்கேரியது அவர்கள் திருமணம்.
பட்டாள நாயகனும் பருவ மங்கையும்
பள்ளியறை செல்ல,
பட்டாளத்திலிருந்து
வந்தது அந்த
பத்து மணி செய்தி,
போரின் முனையில் நாடிருக்க,
பள்ளியறையில்
பெண்டாட்டி இருக்க,
இரு மனமாய் கிளம்பினான் போர்முனைக்கு,
மங்கை அவள் மனம் நோகாமல் அனுப்பி வைத்தாள் அவளின் மாவீரனை!!!
மண் வாசனை சேரவில்லையோ
மஞ்சள் வாசனை போதவில்லையோ!
மறுநாள் இரவு அவன் மீண்டும் வீடு வந்தடைந்தான் பூதஉடலாக!!!!
கண்ணிமைக்காமல் பார்த்தவளுக்கு,
அவன் சொன்ன வார்த்தை " நான் அதிர்ஷ்டசாலியடி"
ஞாபகம் வர
ஓ..... என கதறினாள்!!!!!



© ❤நான் வாணி ❤