...

8 views

காத்திருக்கலாம், அவளுக்காக!¡
கால் கடுக்கக்
காத்திருக்கலாம்...

காலம் முழுவதும்,
காதல் செய்யப்
போகும்., இவளுக்காக!

கண் கடுக்கக்
காத்திருக்கலாம்...

கணம் நீங்காது,
காதல் செய்யப்
போகும்., இவளுக்காக¡

கை கடுக்கக்
காத்திருக்கலாம்...

பெரும் வாழ்க்கைக்
கொடுத்து,
காதல் செய்யப்
போகும்., இவளுக்காக!

உடல் வலிக்கக்
காத்திருக்கலாம்...

காலமெல்லாம்
உடனிருந்து,
காதல் செய்யப்
போகும்., இவளுக்காக¡

உயிர் வலிக்கக்
காத்திருக்கலாம்...

உயிருள்ள வரை,
காதல் செய்யப்
போகும்., இவளுக்காக!

© சரவ் 🚶