...

57 views

பேசி கொல்லாத நாட்கள்
நினைவிருக்கிறதா?!
நீயும் நானும்
வரைந்த
வார்த்தை கோலங்களை

என் கேள்விகள்
எல்லாம்
கோலப்புள்ளிகள்

உன் பதில்கள்
எல்லாம்
சிக்கல் இல்லாத
நூல் இழைகள்

இடையில் உதிர்ந்த
புன்னகையோ
தூவப்பட்ட
வண்ணங்களாய்

பேசும் போதெல்லாம்
விழிகள் பார்த்தே பழகியதால்
பார்க்காத போது பேசினாலும்
முகபாவங்களை
சேகரித்த இதயம்
தனியே படம் ஓட்டி காட்டும்...

நித்தம் இதயம்
நீர் தெளித்து வைக்கும்
நீ போடும்
வார்த்தை கோலங்களை
சுமக்க...

பேசாத நாட்களில்
நாட்காட்டி
பட்டமரம்

பேசி கொண்ட நாட்களில்
நாட்காட்டி
ஆலமரம்...

பேச்சின் இடையே
மனதில் பட்ட
பாடல் வரிகளை
முணுமுணுக்க
இதை தானே
நான் நினைத்தேன்
என் நீ கூற
நின்ற இடம் சுற்றி
பட்டாம்பூச்சி பறக்கும்...

பேசியே ஒருவரை
புரிந்து கொள்ள முடியுமா?

முடியும் என்று தான்
தோன்றுகிறது

நாம்
பேசிக்'கொல்'லாத
நாட்களில்...







#WritcoPoemPrompt29
Remarkable was the day of your birth,
Remarkable was your childhood,
And the years that followed too soon,
Remember your journey one last time,
Before you close your eyes...
© Meera