...

3 views

விழி மொழியில் காதல்..
விழிகளிலே..
அவள் விழிகளிலே
விழுந்தேனே..
நானும் விழுந்தேனே..

தேனடையில்
விழுந் தேனாய்..
அவள் விழியில்
நானும் விழுந்தேனே..

விழுந்தாலும்
இனிக்கும் தேனாய்..
இருப்பாளே..
ராணி அவளே..

அவள்
விழியழகே..
அவள்
மொழியழகே..

விழியிரண்டில்
விழுங்கியே போனாலே..
விழுந்தாலும்
வலிக்காது ரசித்தேனே..

விழியழகில்..
மதியவளை..
மறக்காது
துடித்தேனே..

விழியசைத்து அவள்..
இணைய இசையும்
சமயம் வரை
விழித்திருப்பேனே..

விழிகாட்டி அவள்,
வழிகாட்டி ஆக..
வந்தாள் போதும்
வரமாகும் வாழ்க்கை..

விழியசையும்
விதம்பார்த்து..
விண்ணிலவும்
விரும்புமிவளை..

விழிபோகும்
தோரணையில்
அவள் விருப்பங்களை
அறிவானிவன்..

விழிபார்வையில்
விசயமறியும்
வித்தையில்
வித்தகனவன்..

விழிவழியே
வெட்கமதை
வெட்கி போக
நோக்கி போவாளவள்..

விழியால்
விட்டுபிடித்து என்றும்
விடாமல் நோக்க
விட்டு கொடுப்பானிவன்..

விடியல் வரும்
விடிந்து போகும்
விடிவிளக்காய் அவள்
விழியிருக்க இவனுக்கு..

விழியில் மொழி
பேசும் பதுமையே..
விழியில் மதுரம்
கொண்ட புதுமையே..

விடுதல் இங்கு
தேவையே தேவையான
அளவில் அவள்
விழியில் விருப்பமறிந்து..

விடையாய் வரமாய்
வருவாளவளே..
விடையின் விதையை
விரும்பி இவன்விதைக்கவே..

விண்மீனும் கூட
விம்மி மின்னும்
வெட்கத்தால்..
இவள் நோக்க..

விண்ணுலகின்
விண்ணப்பம் அது..
விரும்புவமிவனை
விழியால் நோக்கவே..

விளைவாளா..அவள்..
விழியருகில் விருப்பம்
வீசி போகுமிவனை
விடாமல் உடன்வருவாளா..

விழியழகில்..
வியந்து மகிழ்ந்து
வியாபகமாய் இவன்
ஏற்க விழித்திருக்க..


© CG Kumaran