...

8 views

காக்கை...குருவி எங்கள் ஜாதி..
எச்சில் பட்ட
இட்டிலி முதல்
மிச்சமாய் எதை
விட்டெறியினும்
துச்சமென எண்ணாது...
சக உறவுகளைக்
கரைந்தழைத்து
கலந்துண்ணும் இவர்க்கு
என் வீட்டின் திறந்தமாடி
ஏகபோக ராஜ்யம்...
தாகம் கொண்டு அலைகையில்
நிதமெந்தன் வாளிநீர்
தீர்த்திடும் தாகந்தனை..!
என்றாவது உணவிடுதல்
தவறின்...
'பலிபீடம்' பார்த்து
பாதிமனமாய்த்
திரும்புவர்..
உணவிடுதல் வெறும்
சாத்திரமல்ல..
உயிரின் பசியாற்றல்
காண்பீர்..!
சனிபகவான்
பெயர்சொல்லி
சக உயிரின் பசிக்கும்
உணவிடுவீர்..!

© SrinivasRaghu