...

3 views

காதல் மாய்வதில்லை
கை சேருமா என்று தெரியாமலேயே
தொடங்கி விட்டது அவனது காதல்.
ஏனோ தெரியவில்லை,
இதயத்தில் அவளை குடி வைக்க
அத்தனை அவசரம் அவனுக்கு.
அவளின் பெயர் தான் தெரியவில்லை என்றால்.
அவளது விழிகள் பேசும் மொழிகளும் புரியவில்லை.
மொத்தத்தில் அவள் மேல் பித்தனாகி போனான்.
அவளோடு பேச இதழ்கள் துடித்தன.
கால்களோ அவளை கண்டாலே ஒளிந்து கொள்ள இடம் தேடின.
இதயத்தில் இடம் கொடுத்தவனுக்கு
இறைவியின் பக்கம் செல்ல கொள்ளை பயம்.
அவளை நிழலை தொட்டு முக்தி பெற்றவன்,
அவளது பாதம் பட்ட மண்ணை தொட்டு முட்டமிட்டவன்,
நெஞ்சம் தொட்டு சென்ற வஞ்சியவளின்
நெஞ்சில் சாய ஏங்கி கிடந்தான்.
அவனது வானில் வானவில்லாய் வந்தவள்,
அவனின் இதயத்தை திருடி சென்றவள்,
தன் இதயத்தை மட்டும் தராமல் சென்று விட்டாள்.
கை சேரும் என்றெண்ணி காதல் வருவதில்லை.
கை சேராது என்றான பின்னும் காதல் மாய்வதில்லை.

© Ebinrider