...

21 views

பா(வே)சம்
வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்க

வாங்கிய மகுடங்கள் எல்லாம்
பைத்தியம் ஆக்க

வானுயர்ந்த பாசம் எல்லாம்
பித்தாக்கி நிற்க

பாவையின் கண்களோ
கண்ணீரால் தத்தளிக்க

சோகம் மட்டும் முகத்தில்
ஒப்பனை ஆகிவிட

கவலைகள் எல்லாம் கண்ணில் மையாக விட

வேண்டுதல் எல்லாம் காற்றில்
பறந்து விட

இரத்தம் எல்லாம் வியர்வை துளிகளாக பூமியை நனைக்க

உயிரை குடித்தவனோ
ஒய்யாரமாக சிரிக்க

உயிரை புகட்டியவளோ
ஊமையாய் மண்ணடியில்...!