...

2 views

அவள் ஒரு பைத்தியக்காரி
துரோகத்தின் தூரிகையால் வரையப்பட்ட வண்ணமற்ற கறுப்புஓவியங்களைச்சுமந்து
வாழ்ந்துகொண்டிருக்கும்
அவளோடுதான்
உங்கள் வன்மங்களும் வளர ஆரம்பித்தது....

நீங்கள் உடைத்தீர்கள் அவளும் உடைந்தாள்
நீங்கள் சிரித்தீர்கள்
அவளங்கே அழுதாள்
உங்களுடைய வாழ்க்கைகளை
நீங்கள் கொண்டாடினீர்கள் ஆனால்
அவள் அவளுடைய வாழ்க்கையினை
துண்டாடி எரித்துக்கொண்டிருந்தாள்....

உங்களுக்கு தெரிந்திருக்காது
தன்னை எந்த மனநிலையில் இருத்திவைத்துப்பயணிக்கிறாள்
தற்பொழுது அவளென்று....

இப்பொழுதும் அவளுக்கொரு உலகம்
இருக்கிறது
அந்த உலகத்தில் மனிதர்களின்
வாசனைகள் பெரிதாக இல்லை..

மனிதர்களின் நேசத்தினை
அவள் நம்புவதும் இல்லை.....அதற்காக
அவள் உலகத்தில் அன்பு இல்லாமல்
இல்லை ஒவ்வொரு வகையான
அத்தனை அன்பிடமும் அவள் தோற்றுப்போகிறாள்தான்....

துரோகம் தெரியாத அவளது அத்தனை
அன்பிற்கும் எப்பொழுதும்
அவளைமிகவும் பிடிக்கும் ஏனென்றால்
அவைகளின் உலகத்தில் அவளும்
ஒரு பைத்தியக்காரிதான்......

இசைவிழி சந்திரன்.
© Isaivily