...

4 views

விழி மோதலில் காதல்..
காற்றோடு உரசும் மனம்..
கரையாமல் வேண்டும் அந்த கணம்..

காற்றோடு தான் என்றும் மோதல்
காற்றின் மீதுதான் எந்தன் காதல்..

அடங்காது திரிவது காற்றல்லவா..
அடங்கி போனால் காதலல்லவா..

கார்மேகம் மேல் கொண்ட மோகம்..
காற்றினால் கனம் பெறும் பாகம்..

கவிதை என்றும் மழையாய்..
வாராதா வார்க்கும் இவனுக்கு..

காதலதை காட்ட அவளிடம்
காற்றும் மழையும் போதாதா..

காற்றில் பறக்கும் பயிர்..
கன்னியவளே இவனின் உயிர்..

மழையில் செழிக்கும் வயல்..
மகிழ்ந்து சிரிக்குமவள் முயல்..

காற்றில் அனுப்பலாம் தூது..
கவிதை மணலை கலந்து..

மண்ணும் அவளிடம் மின்னும்..
மகரந்தமும் அவளிடம் கெஞ்சும்..

பூக்கள் சாய்ந்து கிடக்கும்
அவளை கண்டு மொட்டவிழ்க்கும்..

வானதியவள் வாஞ்சையாய்
ஒருபார்வை பார்க்க..

கடலும் மலையும் கானகத்தின்
இன்பமும் ஒரு சேராதா..

காற்றின் போக்கும் கடலின்
அலையும் ஆர்பரித்து ஓயாதா..

இடியும் மின்னலும் கொட்டும்
மழையும் கொண்டாடி மகிழாதா..

பூக்களும் புன்னகை செய்து
பூமணத்தை அள்ளி வீசாதா..

காற்றும் தென்றலாய் பதமாக
தடம்மாறி தழுவாமல் போகாதா..

மேகமும் மெதுவாய் இதமாய்
ஜொலித்திட ஒளியும் கூடாதா..

நிலவும் நில்லாமல் அவள்
நிற்குமிடத்தை அழகில் நிரப்பாதா..

அவள் சைகைமொழி பார்த்து
பதபதைக்கும் அவனும் பற்றுவானா..

பார்வையில் மொழிகள் பேச..
விழிகளில் மோதல் கொள்ள..

காதலில் புதுமை செய்ய..
காத்திருக்கு அவன் அவளுக்காக..

© CG Kumaran