...

8 views

wishes
மறுமொழியேதும்
ஏதும்
கூற இயலாத
என்
மறுபிறவியவள்..!

ஈடில்லா
இன்பத்தினை
எனக்காய்
படைக்கும்
பிரம்மனின்
அவதாரமாவள்..!

காற்றின்
மொழியில்
காவியம் படைக்கும்
காதல் மொழியிவள்..!

கவிளுக்கு
உயிர் கொடுக்கும்
கலைமகளிவள்..!

எத்துனை வலிகள்
சுமந்தாலும்
மழைலை பேசும்
கொஞ்சு மொழியில்
மொத்தமும் மாற்றிடும்
வித்தைகாரியவள்..!

முகம் சற்று
கணத்தாலும்
தாயாய் மாறிடும்
தாயுமானவளிவள்..!

ஒற்றை மொழியில்
நித்தம் கொல்லும்
கார்குழலியிவள்..!

ஒற்றை
அரவணைப்பில்
யுத்தம் வென்ற
முத்தத்தின்
ராட்சசியிவள்..!

எத்துனை
சண்டையிட்டாலும்
உணர்வாய்
உயிரை
பற்றிடும்
அன்பிற்கினியவளிவள் ..!

ஒவ்வொன்றிலும்
தனித்துவம்
காட்டிடும்
என் காதல் ராட்சசி..!
🍫🍫🫂🍫🍫

© Manis✒️தனிமைகாதலன்