...

12 views

நமக்குள் என்ன உறவு


நமக்குள் என்ன உறவு..
இதைத்தான் நானும்
தேடி அலைகிறேன்….

எனக்காக எதுவும் செய்ய
துணியும் போதும்…
சாய்ந்து கொள்ள உன்
தோள் கொடுக்கும்போதும்
என பிரச்சினைகளை
தீர்க்க முயலும் போதும்
உற்ற தோழனாகிறாய்…

என் உடல்நிலை
சரியில்லையெனில்
பக்குவமாய் எனை தாங்கி
அருகில் இருந்து சோறூட்டி
சீராட்டி தாலாட்டி
எனை மடியில் போட்டு
உறங்கவைக்கும் வேளையில்
என் தாயாகிறாய்….
நான் சாதிக்க நினைக்கும்
போதெல்லாம் எனை
ஊக்குவித்து உரியன
செய்து எனை தட்டிக்
கொடுத்து உருவாக்கும்
போதெல்லாம் என்
இனிய தந்தையாகிறாய்….

வீணாக சண்டை போட்டு
உன் அமைதி கெடுத்தாலும்
பேருக்காக என்னோடு
மல்லுக் கட்டி நின்று பின்
விட்டுக் கொடுத்து என்
உச்சி முகர்ந்து செல்கையில்
உற்ற தமையனாகிறாய்….

விரக தாபத்தில்
தவிக்கையில்
கட்டியணைத்து
விரல் கோர்த்து
உனக்குள் என் உயிர்
வைத்து என்னை
ஆளுமை செய்கிறாய்…

உனக்கும் எனக்கும்
என்ன உறவென்று
எப்படித்தான் கூறுவேன்….

வார்த்தயில் வடிக்க
இயலாத உறவென்றா…
இல்லை நீ மட்டும் தான்
என் உயிர் என்றா…….

என் உயிரானவனே
என் உயிரில்
உறைந்தவனே
உறவென்று எதுவும்
உறைக்க
தேவையில்லை
என உயிராய்
உனையே சுமக்கிறேன்….