...

8 views

கன்னி வெடிகள் கதை- 2 , தியாகம்.
கல்லூரியில் இறுதி யாண்டு முடிக்கும் மாணவர்கள் சிலர் என் சி சி பயிற்சி (தேசிய மாணவர் படை பயிற்சி இயக்கம்) மைதானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிஷிக்கல் மாஸ்டர் ரவீந்தரின் கீழ் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உள்ளனர், குறிப்பாக பத்து நபர் கொண்ட குழுவிற்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார், இவர்கள்குள் மூன்று பெண் மாணவிகள் உள்ளனர், இந்த மாணவர்கள் ஐ பி எஸ் மற்றும் ஐ ஏ எஸ், இராணுவ அதிகாரிகளாக செல்ல மேற் கொண்டு படிக்கும் விருப்பம் உள்ளவர்கள் யு பி எஸ் சி தேர்வு எழுத உள்ளனர் ஆதலால் முன் னெச்சிரிக்கையாக சிறப்பு காக செயல்பட இந்த சிறப்பு பயிற்சி எடுத்து கொள்ளுக்கின்றனர்,
மைதானத்தில் தினந்தோறும் காலை நேரங்களில் தூள் தூசி பறக்க ஒன் டு ஒன் டு யென ஒன் டு த்ரீ மற்றும் லெப்ட் ரைட், ரைட் லெப்ட் யென மார்ச் அணிவகுப்புகள் தீவிரமாக இடைவெளி இல்லாமல் ஓரு மணி நேரம் கடின பயிற்சிகள் மட்டுமின்றி க்ரௌன் ட்ரில் பயிற்சிகள், ரன்னிங், ஜாம்மிங், உட்கார்ந்து கொண்டு தாவுதல் மனிதர்கள் என கொள்ளாமல் இயந்திரம் போல் செயலப்பட்டு வருகின்றனர்,
இந்த பத்து மாணவர்கள் தனிப்பட்ட முறையில் பிஷிக்கல் மாஸ்டர் ரவீந்தரிடம் மேலும் சில நுணுக்கமான பயிற்சி விவரங்கள் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர், பிஷிக்கல் மாஸ்டர் ரவீந்தர் த்தேரி என்று முறையில் சொல்லிக் கொண்டு வருகிறார், பயிற்சிகள் மைதானம் மட்டும் அல்லாமல் வெளி புறம், அஃதாவது மலை சார்ந்த பகுதிகள், நீரோடைகள் பகுதிகள், ஆற்று மணல் பகுதிகள், காட்டு பகுதிகள் பயிற்சிகள் செய்ய வேண்டும் ஆதலால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை களில் ஒவ்வொரு இடத்திற்கு சென்று பயிற்சிகள் முடித்து வருகின்றனர், இந்த வாரம் மலையின் சிறு நீர் வீழ்ச்சி உள்ள சென்னூர் பட்டி மலை அடிவாரம் கிராமத்திற்கு செல்லலாம் என்று மாஸ்டர் சொல்லுகிறார்..
அந்த கிராமம், ஊருக்கு அடுத்த காட்டு பகுதி அங்கிருந்து சிறு நீர்வீழ்ச்சி மிக குறுகிய வருகிறது, அடுத்து மலை கற்கள் இடையில் பாய்ந்து காட்டு மரங்களின் கீழ் அகன்ற அளவிற்கு ஓடி வருகிறது சுமார் ஒரு அடி உயரம் வரை தண்ணீர் பாய்கிறது, பிறகு மிக பெரிய ஏரியில் கலக்கிறது, அந்த ஏரியின் கரை ஓரத்தில் பாதை செல்கிறது, மாணவர்களும் மாஸ்டர் சேர்ந்தது அவ்வழியாக ஜீப்பில் செல்கின்றனர், கரையின் ஓரத்தில் எண்ணிக்கையில் அடங்கா தென்னை மரங்கள் சுமார் ஐந்து ஆறு கிலோ மீட்டர் வரை நீள்கிறது, அங்கே ஒருவர் கண்டு ஓரிடத்தில் ஜீப் நிறுத்துக் கின்றனர்,ஒருவர் இளநீர் களை வெட்டி சைக்கிளில் கட்டி கொண்டு இருக்கிறார், அவரிடம் ஒரு நூறு ரூபாய் நீட்டி அனைவருக்கும் இளநீர் வெட்டி தாருங்கள் என்கிறார் மாஸ்டர் ரவீந்தர், ஆளுக்கு ஒன்று யென வெட்டி தருகிறார், ஒன்று யென இரண்டு மூன்று என்று இளநீர் களை குடிக்கின்றனர், மேலும் பணம் கொடுக்கும் போது மறுத்து விடுகிறார் இளநீர் காரர் நூறு ரூபாய் போதும் என்று நீங்கள் யார் என்று கேட்க இவர்கள் தான் வருங்கால போலிஸ் அதிகாரிகள் மற்றும் கலைட்டர்கள் என்று சொல்ல இளநீர் காரர் தலையை ஆட்ட அனைவரும் வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட்டு அடிவாரம் நோக்கி செல்கின்றனர்..
அன்று நீர் நிலைகளும் மணல் பகுதியிலும் பயிற்சிகள் மேற் கொள்ளுக்கின்றனர், பிறகு மாஸ்டர் ரவீந்தர் அடுத்து ஞாயிற்றுக்கிழமை மலை கற்கள் மீது பயிற்சிகள் மேற்கொள்வோம் என சொல்லி அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி விடுகின்றனர்..
மறு ஞாயிற்றுக்கிழமை பயிற்சியில் ஈடுபட மாணவ மாணவிகள் மற்றும் பிஷிக்கல் மாஸ்டர் ரவீந்தர் நீர்வீழ்ச்சியின் மலை கற்கள் வந்து சேர்ந்துள்ளனர், இளநீர் காரர் யை தேடுகின்றனர் அவர் கண்ணுக்கு எட்டா வண்ணம் தூரத்தில் உள்ளார், மேற்கண்ட பயிற்சியில் ஈடுபடுகின்றனர்,
மலை கற்கள் சிறியதும் பெரியது மாய் இருக்க இவற்றின் இடையே நீர்வீழ்ச்சி யின் நீர் பாய்ந்து ஓடுகிறது மலை அடிவாரம் மரங்களின் நிழல் களில் மகிழ்ச்சி பொங்கும் சூழல், மாணவர்கள் ஒரு பாறை யிருந்து மற்றொரு பாறைக்கு தாவி குதிக்கின்றனர். இவ்வாறு ஒரு பாறை இருந்து தாவி குதித்து ஐந்து ஆறு பாறைகள் மீது ஜம்ப் செய்து ஓடுக்கின்றனர், மதியம் உணவு உண்ட பின் பயிற்சிகள் தீவிர மாக மேற் கொள்ளுக்கின்றனர்.
பிஷிக்கல் மாஸ்டர் நடந்து வரும் போது தற்செயலாக மிதித்து உடன் கிளிக் என்ற சப்தம் உடனே மாஸ்டர் நின்று யோசிக்கிறார், சற்று காலின் ஷூ க்கு அடி பாகத்தில் ஏதோ அழுத்தம் மேல்நோக்கி தள்ளுகிறது என்று அறிந்து இது கன்னி வெடி யாகத்தான் இருக்க கூடும், கால் எடுத்து விட்டால் வெடித்து விடும், அனைவரும் இறந்து விடுவோம் என்று கால் யை பலமாக அங்கே யே வைத்து விடுகிறார்.
உடனடியாக மாணவர்களை பயிற்சிகள் நிறுத்த சொல்லி, அனைவரும் விரைவாக வீட்டுக்கு புறப்படுங்கள் என்று ஆனை இடுகிறார், மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஜீப் இருக்கும் இடத்திற்கு சென்று இருக்கும் போது மாணவர்கள் "மாஸ்டர்" நீங்களும் வாங்க போகலாம், அவர் நான் இங்கே இருக்கிறேன் இந்த சூழல் நல்லா இருக்கு, நான் வர மாட்டேன் நீங்கள் எல்லோரும் போயி விடுங்கள், ப்பாஸ்ட் க்யூக் மேக் ப்பாஸ்ட், என்கிறார் மாணவர்கள் ஜீப் அருகில் சென்று மாஸ்டர் பார்க்க
கின்றனர், மாஸ்டர் டாட்டா சொல்லுகிறார் மாஸ்டரின் கால் நடுக்கம் காண்கிறது. மாணவர்கள் மாஸ்டர் பார்க்க ஆனால் மாஸ்டரோ சென்று விடுங்கள் கை யை அசைத்து கொண்டே இருக்கிறார், மாணவர் ஒருவருக்கு சந்தேகம் வருகிறது மாஸ்டர் நோக்கி வருகிறார், உடனே மாஸ்டர் கிட்டே வர வேண்டாம் போயி விடுங்கள் என்கிறார், மாணவர் மிகவும் அருகே வந்து என்ன மாஸ்டர் நீங்கள் போயி விடுங்கள், மாணவருக்கு ஒன்றும் புரிய வில்லை, மாஸ்டர் கண்களில் சிறு துளி கண்ணீர் மல்க, கால்கள் நடுக்கம், மாஸ்டர் விவரமாக சொல்லுங்கள் என்றான் மாணவன், உடனே மாஸ்டர் என் காலின் கீழ் "லேண்ட் மைன்ட்" (கன்னி வெடி) இருக்கிறது, கால் எடுத்தால் வெடித்து இறந்து விடுவோம், நான் இறந்தாலும் பரவவில்லை நீங்கள் உயிர் பிழைக்க வேண்டும் தயவு செய்து வீட்டுக்கு போயி விடுங்கள், என்று மாஸ்டர் கை எடுத்து கும்மிடுகிறார், மாணவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி, புரியவில்லை, மாணவர்களின் கண்களில் கண்ணீர் துளிகள், மாணவர்கள் அனைவரும் மாஸ்டர் எப்படி ஆவது காபாற்ற பட வேண்டும் என்று ஆதங்கம் மாணவர்கள் போவதாக இல்லை, அனைவரும் மனசு திக் திக் திக் என்கிற தவிர மாஸ்டர் நான் ஒருவன் இறந்து விடுகிறேன், நீங்கள் எல்லோரும் உயிர் பிழைத்து கொள்ளுங்கள் என்கிறார், மாணவர்கள் அழ தொடங்கினர், புரியா நேரத்தில் இளநீர் காரர் வெகு தொலைவில் தென் படுகிறார், உடனே மாஸ்டர் மாணவர் ஒருவரிடம் நீ போயி இளநீர் காரரிடம் கத்தி வாங்கி வா, போ என்றவுடன் உடனே இரண்டு மாணவர்கள் வேகமாய் ஓடுகின்றனர்.
இரண்டு மாணவர்களை கூப்பிட்டு அருகில் இருக்கும் பாறை ஒன்றை எடுத்து வாருங்கள் சுமார் நாற்பது, ஐம்பது கிலோ எடை இருக்க வேண்டும், என்றவுடன் உடனே பாறை ஒன்றை உருட்டி கொண்டு வருகின்றனர், இரு மாணவர்கள் கத்தியும் கொண்டு வந்தனர், உருட்டி வந்த பாறை யை கன்னி வெடி இருக்கும் கால் மீது அதாவது காலின் ஐந்து விரல்கள் மீது பாறை வைக்க சொல்லுகிறார் மாஸ்டர், மாணவர்கள் அவ்வாறே பாறை யை வைத்தனர், இப்பொழுது கன்னி வெடி மீது ஐந்து விரல்கள் கொண்ட கால், கால் மீது பாறை, இப்போது பாறை யின் கீழ் காலின் ஐந்து விரல்கள் நசங்கி இறுகி உள்ளது..
உடனே மாணவரை அழைத்து கத்தியால் எனது கால் யை வெட்டி விடு மாறு சொல்ல, மாணவர் கண் கலங்கினார், ஏனைய மாணவர்களும் பதை பதக்கின்றனர், கண்ணீர் துளிகள் ததும்புகிறது, கத்தி வைத்து இருக்கும் மாணவர் கை நடுக்கம், வெட்டாமல் இருக்கிறார், மாஸ்டர் ஒன்று கிடைக்க வேண்டும் என்றால் ஒன்று இழக்க வேண்டும் என்று சொல்லி கத்தியை பிடுங்கி கொண்டு தன் கால் யை தானே வெட்டி கொள்கிறார், இரத்தம் பிரிட்டு வெளி யேறுகிறது ஒரு வெட்டு இல்லாமல் நான்கு ஐந்து வெட்டி கள், கால் ஷூ யோடு சேர்த்து தனியாக வந்து விட மாஸ்டர் மயங்கி துடி துடிக்கிறார் மாணவர் கள் அனைவரும் பிடித்து தூக்கி கொள்ளுகின்றன ர், இரத்தம் பிரிட்டு வருகிறது மாணவிகள் இருவர் கிடைத்த துணிகள் வைத்து கட்டு கட்டுகின்றனர், ஜூப் பில் ஏற்றி படுக்க வைக்கின்றனர், இளநீர் காரர் இரத்தம் வராமல் இருக்க வேட்டி மேல் துண்டு கொடுக்கிறார், கட்டு கட்டப்படுகிறது ஜூப் டவுன் உள்ள முகாம் ஹாஸ்பிடல் எடுத்து செல்ல படுகிறது,
மலை கற்கள் பாறைகள் மீதும் இரத்தம், நீரில் இரத்தம் கலந்து பாய்கிறது.

மறுநாள் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, இச்சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொண்டு கன்னி வெடி செயலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாஸ்டரின் துணிச்சலான செயல் குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலனை க்கு அனுப்ப படுகிறது..
சில மாதங்கள் கழித்து மாணவர்கள் மாஸ்டர் சந்திக்க செல்கின்றனர், மாணவர்கள் மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் சந்தித்து கண்ணீர் விடுகின்றனர், மாஸ்டர் அழாதீர்கள் நான் இந்த நாட்டின் முக்கிய பதவிகள் வகிக்கும் மாணவர்களை காப்பாற்றி விட்டேன், அது போதும் எனக்கு, என் ஒரு கால் ஐந்து விரல்கள் போனால் என்ன,
மாணவர்கள் ஆகிய நீங்கள் சாதிக்கும் திறன் பெருமை களே எனக்கு அரன் என்கிறார் மாஸ்டர் ரவீந்தர்.......

முற்றும்




© G.V.KALASRIYANAND