...

17 views

பிடிக்கவியலா காதலே..
பிடிக்காத வினோதம்
பிடித்ததன் காரணம்
பிடித்தவள் பிடித்தம்
பிடிக்கவியலா காதலே..

பிடித்தது பிடிக்காதது
பிடித்தாயினும் நன்று
பிடிக்காவிடினும் இன்று
பிடித்தது வினோதமென்று..

பிடித்தவள் மனமென்று..
பிடித்ததால் மாற்றமொன்று..
பிடிக்க காரணமென்று
பிடித்து சொல்லவில்லை..

பிடித்த நிலவும்..
பிடிக்கா தூரம்..
பிடித்த மௌனமும்
பிடிக்கா தருணம்..

பிடித்த அவளே..
பிடித்து செல்ல..
பிடிக்கா நொடியும்
பிடிக்கும் நொடியே..

பிடித்த கடலும்
பிடிக்கா அலையும்..
பிடித்த பயணமும்
பிடிக்கா தூரமும்..

பிடித்து வரவே..
பிடித்தம் அவளுடன்..
பிடிக்கும் பயணமும்
பிடிக்கா தூரமும்..

பிடித்து போகுமே..
பிடித்து பகிரந்திடா
பிடிக்கா கணக்கில்
பிடித்த காதல்..

பிடிக்கவே தொடக்கம்..
பிடித்தே பயணம்..
பிடிக்கா தூரம்..
பிடித்து செல்லவே..

பிடித்தமும் படித்தமும்
பிடித்ததன் அர்த்தமும்
பிடித்து வைத்திட
பிடிமணலிலும் காவியம்..

பிடிநீரிலும் கவிதையே..
பிடிக்கா அளவினில்
பிடித்த அவளிடம்
பிடித்து கூறவே..

பிடிக்கா நேரமும்..
பிடித்து செல்லவே..
பிடித்தே படித்தால்..
பிடிக்கும் வாழ்வும்..

பிடிக்கா வாழ்வும்..
பிடிக்கா படித்தமும்..
பிடித்து போகுமே..
பிடித்த காதலால்..

© CG Kumaran