...

9 views

காற்றின் மொழி..
காற்றுக்கும்
மொழிகளுண்டு..
காது கொடுத்து
கேளாத வரை..
காற்றை அறிய..
காற்றை உணர..
வழியில்லை..

காற்றின் மொழி..
மென்மையானது..
அமைதியானது..
அழகானது..
அர்த்தமுள்ளது..
அர்த்தங்களை
அழகாக காட்டுவது..

மரமசையும் விதமழகு.
என்றால்.. மரத்தை
ஆட்டும் காற்றின்
பாணி தனியழகு..
மரமசையும் போது
அசையும் இலைகள்
அதெழுப்பும் ஒலியழகு..

காற்றினூடே வாழும்
நாம்... காற்றை உணர
உணவை போல் கொண்டு
மகிழ.. மணமதை மணந்து
ஏற்க.. தென்றலை தேடி
ஓடியுணர.. இசையின் கானம்
அறிவதும் காற்றின் மொழியால்..

காக்கை கரையும் விதமழகு..
குயில் கூவல் தனியழகு..
அனைத்தையும் கடக்கும்
காற்றின் மொழியழகே..
கானமாய் காதில் கேட்கயிலே..
காற்று உரசி போகும்
சுகமழகு.. தென்றலாய்..

காற்று அடித்து கூறும்
விதமழகு.. புயலாய்..
தென்றலும் தேவை..
புயலும் தேவை இங்கு..
காற்றின் பரிமாணமே..
கர்வத்தின் பகுமானமே..
காற்றின் மொழியே..

மனிதரின் மொழியும்
மற்றவைகளின் மொழியும்
மாற்றலாம்.. மாறுபடலாம்..
மகத்தான காற்றின் மொழியை
மாற்ற மனிதரும் மற்றவைகளும்
இயன்றாலும் முடியாது.. மாற்ற
முயன்றால் மடமையே..

காற்றின் மொழி..
பரந்த சக்தி நிறைந்தது..
பிரிவினை என்றும் பாராதது..
அனைவருக்கும் விளங்குவது..
அனைவரையும் வாழ வைப்பது..
அனைத்தையும் கவனிப்பது..
அனைவரையும் தொடுவது..

© CG Kumaran