...

18 views

போதும் போதும்
#Sunflower
போதும் பெண்ணே போதும்
சூரியன் செல்லும்
திசையெல்லாம் திரும்பும்
சூரிய காந்தியாய்
வாழ்ந்தது போதும் ..

நீயே உலகின் ஒளி..
நீயின்றி
உலகில் ஒளியேது தாயே

பாட்டியாய்
தாயாய்
தமக்கையாய்
தங்கையாய்

துணைவியாய்
மாமியாய்
மகளாய்
மருமகளாய்
பேத்தியாய்...

தோழியாய்
சிற்றன்னையாய்
பெரியன்னையாய்

உனக்குள் தான்
எத்தனை அவதாரங்கள்‌...

நீயே உலகின் ஒளி...
நீயே உலகின் வழி


© வேல்முருகன் கவிதைகள்