தொய்வடையும் ஆளுமைகள்
பல பாசமுள்ள ஆசான்களின்
வழிகாட்டல் போல
நல்ல பழங்கள் என்றும்
இனிப்பாக நாவுகளை சுவையூட்டும்
ஆனாலும் ஒரு சில புளிப்பானவை
அதுவும் சில தவிர்க்க
முடியாத தலைவலி போல......
யாரும் விரும்பும் பணிவான
சிஷ்யர்களின் நடத்தை போல...
முத்துக்கள் எப்போதும்
அழகானவை கவர்ச்சியானவை
பெறுமதிமிக்க ஆபரணங்களை
அலங்கரிக்கும் என்றென்றும்....
ஒரு குழப்படியான
மாணவனைப் போல.......
மயிர்க்கொட்டிகளை யாரும்
எப்போதும் விரும்புவதில்லை
அது அழகியவண்ணத்திப்
பூச்சியாக உருமாறி
சிறகடித்துப் பறக்கும் வரை .....
கற்ற பொறாமை பிடித்த
சில மனிதர்கள் போன்ற
மூட்டைப்பூச்சிகளையும்
யாரும் விரும்புவதில்லை
அவை வசிக்கும் இடத்தை கூட
யாரும் விரும்புவதில்லை
அதன் நாறும் வாடை காரணமாக......
பாசத்தை அளவோடு கலந்து
கண்டிப்புடன் பிசைந்து
அறிவமுதம் ஊட்டி ஊட்டி
களைத்துப் போகின்றேனோ
என்று எண்ணத் தோன்றுகின்றது
சீரணக் கோளாறு கொண்ட
எம் குழந்தைகளுக்கு
விரயமாகும் எங்கள் அறிவன்னத்தை
எண்ணியெண்ணி........
அவர்கள் எப்போதும்
புரிந்து கொள்ள மாட்டார்கள்
கண்டிப்புடன் கூடிய நல்லாசிரியரின்
வழிகாட்டல் எதிர்காலத்திற்காக
அவர்களைப் புடம் போடும் என்பதை
நாங்கள் மாத்திரம் ஓய்ந்து
போகும் காலத்தில் கூட
தொய்வின்றி போராடியவாறு......
© siriuspoetry