...

0 views

ஆதி முகத்தின் காலப் பிரதி தொடங்கி அழுகையைத் தின்பவள் வரை
ஆதிமுகத்தின் காலப்பிரதி - இரா.பூபாலன் (நவம்பர் 20/2023) - அழுகையைத் தின்பவள் - யாமினி மழையினி (ஆகஸ்ட் 20/2024)

எப்போதும் நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து நினைவுகளை கூடுதல் அழகாக்கி பதிய வைப்பவள்....

அப்படித் தான் ஆதி‌ முகத்தின் காலப்பிரதியும்
இன்றைய அழுகையைத் தின்பவள் என்ற இந்த கவிதைத் தொகுப்பும்.....

ஆதி முகத்தை நிழற்படம் எடுக்க வந்த அதே இடத்தில் தான் அழுகையைத் தின்பவள் என்ற கவிதைத் தொகுப்பையும் நிழற்படம் எடுக்க வந்து நின்றிருக்கிறேன் - (எதேச்சையாக)

நின்ற நிழற்படம் எடுத்த பின்பு தான் நினைவுக்கு வந்தது இந்த விடயம்.....

அதே இடம் தான்
அதே வாழ்க்கை தான்
அதே நான் தான்

(பருவம்
அது நவம்பர் கார்த்திகை லேசான பனி, மழை - இது ஆகஸ்ட் ஆவணி காற்று இலேசான மழை)

ஆனால் எத்தனை எத்தனை மாற்றங்கள்

அன்றைக்கு இருந்த தென்னம்பிள்ளைகள்
இன்று இங்கு இல்லை
பஞ்சம் ஒன்று வந்து அடியோடு பெயர்த்து எடுத்து விட்டது....
தப்பிப் பிழைத்தவைகள் தான் இப்போது தழைக்கிறது..

அன்று நலத்தோடு இருந்த தாத்தா
இன்று எத்தனையோ உடல்நலக் குறைவுக்குப் பின்னர் மீண்டும்
நலமாகி உள்ளார்

குரங்காடாய்க் கிடந்த
சாம்பக்காடு
மற்றொருவருக்கு
கை மாறி
குரங்கு கையில் சிக்கிய பூமாலை
போல சின்னாபின்னப் படுகிறது....

சுகன்யா வளர்த்த கோழி 2‌ முறை குஞ்சு பொரித்திருக்கும் எத்தனை கோழிகள் வளர்த்தாலும் அவள் போல் அறிவு யாருமில்லை யென பேச்சு...
குஞ்சுகளைத் தாக்க வரும் அத்தனை எதிரிகளையும் பறந்து பறந்து அடித்து
தன் எல்லாக் குஞ்சுகளையும் பறி கொடுத்து விடும் கோழிகளுக்கு மத்தியில்

தன் ஒரு பிள்ளையைக்...