...

13 views

முதன்முறை...
இருள் சூழ்ந்த அறையினிலே எனை
சூழ காத்திருக்கும்,எனை எந்தன்
பெற்றோரிடம் வளம் வாங்கி பெற்றவனே..

இரவோடு இரவாக என் ஆசை
அறியாது என் மேனி முழுவதிலும் படர்ந்துவிட நினைப்பவனே..

என் ஆசை ஏதென்று உன்
அறிவு அறியாது..
இன்றுலகம் அழிவதைப்போல்
கலவியின்றி முடியாது..
பேசி சற்று இருந்திடவே உன்
ஆன்மை பொறுக்காது..
வேறு என்ன நான் செய்ய.?
உன் இரையாவதின்றி வழியேது..

பூப்பெய்த நாள் முதலே நான்
மட்டும் கண்ட தேகம்..
சட்டென்று உன் முன்னே காண
கேட்டால் என்ன நியாயம்..

உடை கலைந்து தலை குனிந்து
உன் முன்னே நானிருக்க..
வெட்கமதில் தலைக்குனிந்தேன்
எனக்கூறி நீயிருக்க..

கணவன் முன்னே கலைவதிலே
கவலை என்ன..? நீ கேட்பாய்..
எவனாகிப்போனாலும் என் தேகம்
எனதன்றோ என நினைத்தேன்..

எதுவாகிப்போனாலும் நான் கூற
எதையும் கேட்பதில்லை..
எனை உனதாக்கி நீ ருசி
பார்க்காமல் விடுவதுமில்லை..

அமைதியாக கிடக்கின்றேன்..
அத்துமீறி ஆனந்தம் கொள்..
ஆண்மை அதன் பலம் கொண்டு
வென்றதாய் நீ நினைத்துக்கொள்..

அனைத்தையும் முடித்துவிட்டு
நானும் மகிழ்ந்ததாய் எண்ணி
என் முகம் பார்த்து சிரித்தாயே..

அதற்கு பதிலுக்கு
நானும் சிரித்தென்...

ஓராயிரம் அர்த்தம் கொண்டு
ஆண்வர்கத்தை பார்த்து
ஒரு கேளிச்சிரிப்பு..

© பினோய் பிரசாத்