...

5 views

உன்னயே ரதியென்று
உன்னையே ரதியென்று
மன்மதனாய் அம்பு விட
நமக்குள் நட்பெனும் பூக்கள்
மலர்வது எக்காலம்?

கொவ்வை பழம் போல
சிவந்த உதட்டுக்காரி
இதழை திறந்து வச்சி
சுவைப்பது எக்காலம்?

ஆற்று கரையோரம்
அத்தி மரம் அடையாளம்
அத்தி மரத்தடியில் கொஞ்சவது
எக்காலம்?

குளத்துக்குள்ள நீ குளிக்க
உன்னழகை நான் ரசிக்க
கண்ணுக்கு தெரிந்தது
கைக்குள் கிடைப்பது எக்காலம்?

ஊருக்கு ஒதுக்குப்புரம்
பாக்கு தோப்போரம்
நாம் இருவரும் கொஞ்சி
மகிழ்வது எக்காலம்?

சனிக்கிழமை சந்தையில
ஊரார்க்கு மத்தியில
கண் ஜாடையில் காதல்
பேசிக்கொள்வது எக்காலம்?

தலை மேல கூடையோட
சுமந்த படி நீ நடக்க
பின்னாடி நான் வந்து
உன்னழக ரசிப்பது எக்காலம்?

முன்னாடி வந்து
ஆச்சிரியமா நான்நிக்க
பதட்டமா உன் நெஞ்சிக்குழி
துடிப்பது எக்காலம்?

வாசல் கூட்டயில
மாராப்பு விலகயில
முன்னழக பார்த்து
மூச்சி முட்டுவது எக்காலம்?

ஆதவன உறங்க விட்டு
பின் வாசல் திறந்து விட்டு
உன் சதங்கை ஓசை என்னை
அழைப்பது எக்காலம்?

பச்சை பசும் சோலையில
பாவி வெயில் கொளுத்துயில
உன் மடிமீது
இளைப்பாறுவது எக்காலம்?

ஆடு புகாத
அடர்ந்த காட்டுக்குள்ள
தேகம் கூடி
ஆசையை ஈடேற்றுவது எக்காலம்?

ஆளில்லா கிணத்தோரம்
கொட்டாயில உண்டு உறங்க
விருந்து வைப்பது காலம்?

இந்துஸ்தான் நாணல்
தலை சாய்வது போல்
என் நெஞ்சி மேல
மெல்ல சாய்வது எக்காலம்?

கருங்வேலம் காட்டு
குருவிகளும் அறியாமல்
மரத்தடியில் கதைபேசி
மகிழ்வது எக்காலம்

உன் சேலை நனைஞ்சி
போகும் வரை
முத்தமழை பொழிந்து
சொக்க வைப்பது எக்காலம்?

உன் பாதங்களை பார்த்தே
அகராதி எழுதுவேன்டி
அந்த இடம் பார்த்து
மண்டி இடுவது எக்காலம்?

மேற்கு வீதி உன் வீதி
கிழக்கு வீதி என் வீதி
வீதிகள் இரண்டும்
சங்கமம் ஆவது எக்காலம்?

சாதி சண்டை காதலக்கு
ஏதும் இன்றி
ஆனந்தமாய் இருவரும்
இணைவது எக்காலம்?

சாதி கலவரம்
ஒதுக்கி வச்ச சாதிசனம்,
இந்த சாதியெனும் கலவரத்தை
ஒழித்து விடுவது எக்காலம்?.
-சங்கத்தமிழன் .