...

7 views

தனிமையில் உறவுகள் ஓராயிரம் !
தனிமையின் வசம் சென்று
தனிமையோடு
தாழ்இட்டு கொள்பவர்க்கு
உறவுகள் ஓராயிரம்!

சண்டையிட்டு நம்
உறக்கத்தை கெடுக்கும்
நல்தோழன் அவன் !
என் அலாரம்!

பேசவார்த்தையின்றி
தவிக்கையில்
தலைகோதிடுவாள்
தமைக்கைபோல் !
என் தென்றல்!

வலிகள் எல்லாம்
கண்ணீராய் சிந்தியதை
தாய்வளாய் தாங்குபவள்!
என் தலையணை!

என் உணர்வுகளை
உணர்ந்த தோழி போல்
என் எண்ணமெல்லாம்
விண்மீனாய்
வரைந்து
சொலிக்கச்செய்தவள் !
என் வானவள்!

புன்னகைக்க
கற்றுத்தந்த
அழகிய தோழன் அவன் !
என் சந்திரன்!

திமிரோடு திரந்தவளை
இதமான சூட்டில்
உருக்கி தங்கம்மாய்
மாற்றிய தந்தை அவன்!
என் கதிரவன்!

பதற்றம்கொண்டு
நான் இருக்க
அழகாய் எனக்கு பாடம்
கற்பித்தவள் !
என் நெற்கதிர்கள் !

கண்ணீரையும்
நேசிக்கக்
கற்றுக்கொண்டேன்
அவளிடத்தில்...
ஏனென்று தெரியவில்லை?
அவளின்
கண்ணீரை மட்டும்
இரசிக்கிறேன் ! அவள்
என் மேகமவள் !

எந்தன் உறவுகள்
எல்லாம் நான்
தொலைத்திடாமல்
இருக்க செய்யும்
வாழ்வின்துணை அவன்!
என் தனிமையே!

________------------______

#நாம் தொலைத்த
உறவுகள் ஓராயிரம்...
தனிமை கொண்டு
இயற்கை உறவை இரசித்திடுங்கள் !


#தமிழ்பக்கம் #தமிழ்கவி #வரிகள்

© Nuradhaag