...

7 views

💞நடுநிசி காதல் 💞
காதல்.....
காதல் என்பது
'சுயநலவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் ஆயுதம்' என்றேன்
அவளைக்
காணும் வரை......

காதல்....
காதல் என்பது தான் 'மனிதன் ' என உலகுக்கு எடுத்துரைக்கும்
ஓர் உன்னத வழி
என்றேன்
அவளைக் கண்ட பின்பு....

அவளைப் பற்றி சொன்னவுடன் இந்த மனதுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!
பாருங்கள் இது கூட என கட்டுப்பாட்டில் இல்லை!
அப்படி மயக்கி இருக்கிறாள் அந்த மாயக்காரி!

நாங்கள் காதலிப்பது இன்னும் யாருக்கும் தெரியாது
உங்களிடம் தான்
முதலில் கூறுகிறேன் ....

எங்களின் சந்திப்பு
இரவின் அரவணைப்பில் பூச்சிகளின் சிரிப்பொலியில் காற்றின் கேலி முனுமுனுப்பில்
அமைதியின்
அனுமதியோடு நிகழும்.....

அவள் முகத்தை நானும்
என் முகத்தை அவளும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்போம்.....

காலம் கணிக்கும் கருவி பன்னிரண்டு முறை தலையில் அடித்துக் கொள்ளும் போதுதான் மௌனம் கலையும் எங்களுள்...