...

5 views

காதல்
வானும் மண்ணும் ஆராதிக்கும் இறைவன் படைப்பில்
இரு மனங்களை சமரசமாய் இணைதலே காதல்.
நான்.. நீ.. என்றிருந்த வாழ்வு 'நாம்' என்று கைகோர்த்தலே திருமணம்.
இரு மனங்களிலும் ஒரே விதமான சிந்தனைகள் தான் காதல் என்றில்லை. அனைவரும் வேறுபட்டவர்கள். வேறான விருப்பு வெறுப்புக்கள் உண்டு. ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதென்பது அவர்களை அவர்களாவே இருக்க செய்தல் தான். இன்பம் துன்பங்களை எல்லாம் இருவராய் இணைந்து கடந்து செல்லுதலுடன் அவர்களின் கனவுகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்கான தயார் படுத்தல்களில் உதவுதலே சிறந்த காதல். வரையறைகள் எதுவும் அற்றது தான் காதல்.காதலில் எவ்வளவோ சமூகக்கட்டுப்பாடுகள் உண்டு. குடும்பம்,மதம்,குலம் எல்லாவற்றையும் மீறித் தான் காதல் மலர்கிறது. எல்லாவற்றையும் எதிர்த்து இன்னொரு வரையறைக்குள் சிக்குவது என்பது முட்டாள்தனமாக ஒன்று. நமக்கான சுதந்திரம் எந்த வகையிலும் பறிபோதல் காதலாகி விடாது. நான் இப்படி இருப்பதால் நீயும் இப்படி இருக்க வேண்டும் என்ற கட்டளைகள் இங்கில்லை.
சுயாதீனமாக மலர்தலே காதல், நம்மை மனவெளியில் காணாத இடங்களுக்குள் எல்லாம் அழைத்துச் செல்லும். கண்களை மூடிக் கொண்டாலும் கனவில் வரும்.அவன் சிரித்தால் சிரிக்கும் அழுதால் அழும். பிரச்சனைகளை தன் போல் தாங்கும்.சாவிலும் பிரிவை ஏற்காது. நம் வெற்றிகளை தனக்கானதாய் கொண்டாடும், தோல்வியை கூட வெற்றியாய் மெருகேற்றும் .நமக்கான அவசியங்களை எல்லாம் பார்த்து பார்த்து செய்யும். பதுமையான ஒருத்தரையும் புயல் போலாக்கும்.மனசார செய்யும் எந்த செயல்களிலும் வெளிப்படாத காதலாய் மனதில் இருக்கும்.

"என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது...."

© kavi Seelan