...

19 views

கிடைக்குமா !
கையருந்த பட்டம் கைசேருமா
காதருந்த கம்பல் கைகூடுமா
தேனிழந்த பூக்கள் தேனை மீட்குமா
தண்ணீரிழந்த ஓடை மீண்டும் ஓடுமா
பாதையற்ற பயணம் பயணமாகுமா பார்வையற்ற கண்களின் தேடல் மீண்டும் தொடருமா
தொடர்ச்சியான கதை தோல்வியில் நிற்குமா
கைகட்டிய கைகள் கட்டை அவிழ்குமா
ஓடிய காலத்தை திருப்ப முடியுமா
திருப்பினாலும் நினைத்ததை நடத்த முடியுமா
ஓசை இல்லா காற்றை பார்க்க முடியுமா
பார்த்தாலும் என் இமையின் துரிதத்தை அளக்க முடியுமா
சொற்கள் யாவும் மௌனம் ஆனதே
பிறர் பார்வை தூரம் சென்றதும்
கேள்விகள் ஆயிரம் இருக்கிறது
விடை கிடைத்த தருணத்தில் கேள்விதான் மறந்து போகிறது
மறந்து போனதோ இல்லை நான் மறைத்ததால் போனதோ !