...

2 views

பெண்
அன்பாய்ப் பேசி அங்குசம் பார்த்து அழகாய் விவரிக்க நான் என்ன ஞானியா?
மறம் கொண்ட செயலை
தன் மனம் செல்லும் பாதையில்
மறைவின்றி சொல்லும்
ஞானம் கொண்டவள்.
தாய்ப்பாலில் அன்பையும்,
தந்தையின் பால் அறிவையும் பெற்றவள்!
பொறுத்து போக அவளுக்கு கற்றுத்தரவில்லை!
பொங்கி எழ
அவளுக்கு நேரம்
போதவில்லை!
அதனால் தான் அவளை
தகர்க்க நினைக்கிறாயோ!
ஏ சமூகமே!
நீ கொண்ட
பெருமையிலும்,
ண்பத்திலும்,
தலை எழுத்தாய் அவளே இருப்பாள்!
"பெண்"

என்றும் அன்புடன்
😍 நான் வாணி😍