...

3 views

கனவின் வெளிப்பாடு
கண்டதும் புதுமைகளை புகுத்தி புவி மேலே புகு புகு குட்டி குட்டி மேகத்திரள்கள் ஓடிக்கொண்டே ஓயாமல் புதிதாய் புவனத்தின் புன்னகையில் கொஞ்சம் அறிவியல் மாற்றங்களில்
விளைந்த செயற்கை மழை கொட்டும்
திடிர்னு இருளில் மூழ்கி போகும் திடுதிப்புனு திங்கள் ஒளியில் மிரட்டும் ஆழம்
ஆழியில் கூட கூட்டமாய் தவழும் மீன்களின் துள்ளலில் பேசும் மொழியும் புரிந்து போகும் புரியாத சத்தம்
நடு மத்தியில் நின்று போகும் மரக்கலங்கள் மங்கா போர் முழக்கம் கொட்டும்
குடை விரித்து வெளியில் பறக்கும் பறவைகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டு குளத்தில் குளிக்கும்
குளு குளு காற்றின்
பசுமை மாற மலைகள் வாழ்விடங்களில் முழுதாய் ஆக்கிரமிப்பு
கொள்ளும்
ஆள் உயர அழகிகள் வரிசையில் நின்று திரும்பும் போது
காதை கிழிக்கும் ராட்சத வாகனங்கள் நகர்ந்த
படியே அதன்
இரைச்சலில் தார் சாலையில் நடுவில் மலங்க மலங்க விழிக்கும் திரை விரிந்து நிதர்சனம்
உறைந்து காட்சி கனவின் இறுதி நிலையில் நிறையும்
இருப்பிடம் பிசு பிசுப்பு கழுத்தின் ஓரம் உணர்ந்து உணர்வு முன்னிரவில் விழுக்கென்று நிமிர்ந்த உடல் நிசப்தம் மட்டுமே குடிகொண்டது கனவின் காட்சி நீளுமோ எண்ணிய மனம்
வணக்கம் 🌼🙏🏻
© Ash(ஈசன் )