...

12 views

தூக்கத்தை தொலைத்து

சிலர் மேல் ஏன் அன்பும் வெறுப்பும் ஒரே நேரத்தில் ஏற்படுகிறது என்று தெரியவில்லை.

அவர்கள் நம் வாழ்க்கைக்கு இனியும் வேண்டாம் என்று மூளை கூறினாலும்,

மனதோ எத்தனை காலம் (அ) நாட்கள் பழக்கம் என்று பார்ப்பதில்லை.

அவர்கள் மீதுள்ள, உண்மையான அன்பை காரணம் காட்டி யாரையும் வெறுக்க வேண்டாம் என்று மனது சொல்கிறது.

ஆனால் இதே போல் அன்பு அவர்கள் மனதில் இல்லையே என்று மூளை கூறுகிறது.

மீண்டும் அன்பை கொடுப்பது தவறில்லை என்பது மனதின் வாதம்.

அன்பை கொடுப்பது தவறில்லை, ஆனால் மீண்டும் உன் அன்பை உதாசீனம் செய்வார்கள், அந்த அன்பை பெறுவதற்கான தகுதி அவர்களுக்கில்லை என்பது மூளையின் எதிர்வாதம்.

இப்படி மூளைக்கும் மனதுக்கும் இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டு கடைசியில் தூக்கத்தை தொலைத்து விடியலுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது இந்த இரு விழிகள்....


© Sai Bhargavi

@WorldPoetry

#மையற்றகிறுக்கல்கள்