...

1 views

சாலை
சாலை

இது பயணப்படுவதற்கான
பாதை மட்டுமல்ல..
வாழ்க்கையை போதிக்கும்
பாடசாலை..
இங்கே
விசித்திரமான மனிதர்களை
பார்க்கலாம்..
பல விதிமீறல்களை
பார்க்கலாம்..
குடித்துவிட்டு
குப்புற விழுந்து கிடக்கும்
குடிமகன்களை பார்க்கலாம்..
அடிபட்டு துடிப்பவனை
அள்ளிக் கொண்டு போய்
ஆட்டோவில் ஏற்றும்
மனிதாபிமானம்
உள்ளவனை பார்க்கலாம்
தெருவில்
கையேந்தும் பிச்சைக்காரனை பார்க்கலாம்.
கண்டும் காணாமல் போகும்
சில கல் நெஞ்சக்காரர்களை
பார்க்கலாம்..
பாதையை அடைத்து
வாகனத்தை நிறுத்துபவனை
பார்க்கலாம்..
பள்ளிக்குச் செல்லும்
சிறார்களை பார்க்கலாம்..
அவசர அவசரமாக..
பேருந்தை நிறுத்த ஓடும்
சில பெண்மணிகளை பார்க்கலாம்..
போக்குவரத்து விதிமுறைகளை
மதிக்காத
சில மனிதர்களை பார்க்கலாம்..
விதிகளை அனுசரித்து செல்லும்
சில
நல் மனிதர்களை பார்க்கலாம்..
ஆம்....
இது பயணப்படுவதற்கான
பாதை மட்டுமல்ல..
வாழ்க்கையை போதிக்கும்
ஒரு
போதி மரமும் கூட!

விக்ணு கௌசிகா





© VIGNU GHOUSIKA