...

9 views

தொலைந்த கனவுகள்
ஒரு முறை முகம் பார்க்கத்
துடிக்கும் உள்ளம்,
மனதில் எழும் ஆசைகளையும்,
வேதனைகளையும் மறைக்கப்
போராடும் தருணம்,
வாழ்வு இவ்வளவு கொடியதா
என்று நினைக்கச்செய்யும் காலம்,
எல்லாம் கண் முன் இருந்தும் அதை உணர இயலா நொடிகள்,
வாழ்வை நினைத்தது போல
வாழ முடியாமல்,
பிறர் அறிவுரையின் படி
நடந்து கொள்ளவும் முடியாமல்,
வாழ்வை முன் கொண்டு செல்ல
தெரியாமல் ஒரு காத்திருப்பு,
உன்னையும் உன் நினைவுகளையும்
இதயத்தில் சுமந்தபடி!!!!
© bingi_rk