...

2 views

தேவதைகள்
தேவதைகள்

இங்கே பிறந்த நொடியில் என் வீட்டில் லட்சுமி வந்ததென தந்தை ஆசையாய் முத்தமிட,
ஊர் கிழவி பெண் பிள்ளை என ஏளனம் செய்ய என் மகள் என் இளவரசி என மார் தட்டிய நொடிகள் கடக்கும் முன்

குப்புற விழுந்த நொடிகள் தாண்டி நடந்த தினங்கள் யாவும், எழுத படாத புத்தகத்தின் பக்கமாய் இருக்க
இவன் யார் இவள் யார் என அறியும் முன் பள்ளியில் சேர்ந்து
இங்கே கணக்கும் புத்தகம் கூட பாரம் இல்லை எவனோ எதற்காக அருகில் வருகிறான் புரியாத நொடிகள் காலம் கடந்து கண்கள் சிவந்து பெண்ணவள் மங்கை யாய் மாறிய தருணம் ஊரே சந்தனம் குங்குமம் தீட்ட ஓவியாமாய் இருந்தவள் அடுத்த மாதம் தீட்டாய் மாறிய நொடிகள் காலம் சென்ற பொழுதில் காயம் கண்ட மனதில்
பயம் ஆட்கொண்ட நெஞ்சத்தில் மறைத்து வைத்த ஆசைகள் பரனில் இருக்கும் பெட்டி போல் அடைந்து இருக்க காதல் இதுதானோ என நினைக்கும் பொழுதில் கல்லூரி செல்ல
அப்பா வதனம் கண் முன் வர காதல் தூக்கிஎரிந்து செல்ல
வேலை செல்ல கொள்ளை ஆசை ஆனாலும் வீட்டில் கிழவி திருமணம் என கூற மொத்தமாய் மாறி போன வாழ்க்கை இங்கே
என் அப்பனிற்கு தேவதை நான்
ஏனோ இவன் கண்ணிற்கு நான் வெறும் பெண்
என் செய்வேன் மொத்தமாய் கிழிந்து போன காகிதமாய் நான் ஒரு ஓரமாய்
சிந்தும் கண்ணீர் வெளியில் தெரியாமல் இங்கே காயம் கண்ட தேவதையாய்

அருள்மொழி வேந்தன்
© அருள்மொழி வேந்தன்