...

19 views

வேசி!
வானவில்லை வளைத்து
மெல்லிய இடையாக்கியவள்...
சூரியனை நெற்றி பொட்டாக இழுத்துக் கொண்டாள்...
மலர்ந்த தாமரை மொட்டிற்கு வனப்பைக் கூட்டியது அவள் கார்மேக குழல்...
முக பாவனைக்கெல்லாம் உணர்ச்சிக்கும் வில் புருவங்கள்...
குறி பார்த்து வசைப்படுத்தும் மை விழிகள்...
மெழுகுருக்கி தங்கம்
கலந்த கன்னம்...
பவழ இதழ் அதில் மேல் பனித்துளி...
அணிகலன் ஏதும் வேண்டாம் அத்தனை செழிப்பும் அவள் சங்குக் கழுத்திலே...
உயிரைப் பறிக்கும் தேகம்...
மல்லிகைத் தேவையில்லை மணம் வீசும் அவள் ஸ்பரிசம்...
மொழிந்தால் இசை...
மௌனித்தால் அமைதி...
சிறிது நேர துனைவி
காதல் தொல்லை இல்லாமல்...
நாழிகைகள் நகராது இருந்தால் சொர்கமே...
என் மனம் போன போக்கிருக்கு போவாள்
சிணுங்கிக் கொள்ளாமல்...
ஒரு வேளை அவள் மனம் திறந்தால்?
பிறர் பணியை போல் இல்லை சிறு கால என்னவரே...
ஏமாற்ற பட்டு இங்கு தள்ளப் பட்டவள்...
தள்ளி போக வழி இல்லை...
உடல் நோகி மனம் நோகிறேன்...
ஒரு நாளைக்கு எத்தனை முறை என்று கணகில்லை...
சுயம் வெறுத்து உயிர் வேகிறேன்...
மானத்தின் இடத்தை பசிக் கேட்க முடியாதென்று முறையிட முடியவில்லை...
அவ்வபோது சிறு நேர துணைவர்கள் பல விதம்...
உணர்ச்சிக்குள் சிக்கி உயிர் போகும் வரை விடாது துயரப்படுத்தும் சிலர்...
தேவைக்கு போதும் என்று சிலர்...
வக்கிரத்தில் சிலர்...
வன்மம் தீர்க்க சிலர்...
வேதனையில் சிலர்...
தனிமையில் சிலர்...
ஆசைக்காக சிலர்...
அன்பிற்காக சிலர்...
இந்த பாவங்களுக்கும் மேல் உண்டு ஒன்று...
கடந்த ஓரிரு நாழிகைகளுக்கு
பரிசாக வரும் கரு...
அது வந்தால் வாடுமென்று...
தீராத பழியாயினும் போகட்டும் என...
'அம்மா'அழைப்பதற்குள்
அழியென்று உயிரோடு உறவையும் அருத்து...
சோகம் தீர நாள்
இல்லாது சுகம் தேடி வந்தவருக்கு உடை அவிழ்த்து உடல்
தருபவள் தானன்றோ...
நான்!

© kookoo