...

4 views

நீ இல்லை என்றால், நான் இல்லையடி
கற்சிலைகளில் காணாத அழகினைக் கொண்ட பெண்சிலையே,
பகல் நானானால், இரவு நீ ஆகிறாய்.
உன்னோடு நான் சேர ஒளியாக வீழ்ந்தால், நீயோ இருளாக நீள்கிறாய்.
ஒளியும் இருளும் ஒன்று சேர இயலுமா?

கண்மணியே ஒளியும் இருளும் எதிரெதிர் சொற்கள் தான்.
ஆனால் வெண்ணிலாவின் ஒளியை ரசிக்க, இருள் இருந்தால் மட்டுமே இயலும்.
இருள் இல்லையெனில் ஒளி இருந்து என்ன பயன்?
அது போல நீ இல்லையெனில் நான் இருந்து என்ன பயன் ❤️
© Anbazhakan S