...

13 views

கல்வி இலவசம்
வாழ்க்கை பாடத்தை கற்றுதர தான் எத்தனை ஆசான்கள் எனக்கு?

நீயும் ஆசான் தான்
இவரும் ஆசான் தான்
அவரும் ஆசான் தான்!!

எவ்வித குருதட்சணையும் இன்றி குருவாகிறர் வருவோர் போவோர் அனைவரும்.

குருவான பின் பாடத்தையும் கற்றுக் கொடுத்து இலவச இணைப்பாக வலியையும் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

மனப்பாடம் செய்து படித்த கல்வி எல்லாம் மனதில் நிற்காமல் இறந்து போக,

இலவச பாடங்களோ பசுமரத்தாணி போல் மனதில் அழியாமல் வேர்விட்டு வலியோடு வாழ்கிறது.
© All Rights Reserved