...

21 views

அதி அவசர முத்தம்
போய்க்கொண்டிருக்கும்
உயிரை தடுத்து நிறுத்துவது போல
ஓர் அதிஅவசர முத்தம் அளி

அதற்கு அப்புறம் 100ஓ 108ஓ
உன் விருப்பம்

என் சுவாசத்தில்
உன் மூச்சுக் காற்றை நிரப்பு

நின் எச்சிலில்
என் எச்சிலை கல

என் தொடுதல்
வருடலாகி
இறுகலாக்கச் செய்

என் மௌனத்தை
முனகலாக்கி
ஓர் உச்சஸ்தாயி இசையாக்கு

கிறங்கிய விழிகளை
திறக்க முடியாவிட்டால் என்ன
விரல்களால் பார்

உலர்ந்திருந்த புறஉடலெங்கும்
வியர்வையால் நனைய வை


© iAmRangz