...

6 views

உன்னோடு வானம் பார்க்க ஆசை....
#love
நெடுநாள் ஆசை இது
என் கனவெல்லாம் அள்ளி இறைத்து காத்திருக்கிறேன்..

உன் விரல் பிடித்து வான் பார்த்து நடை போக ஆசை
ஒளி மழுங்கும் நேரம் கூட
உன் துணையில் நகர ஆசை ...

கரையும் நிமிடங்களில் கூட
உன் கொஞ்சல் கதைகள் என்
காதருகே ஒலித்திட ஆசை .....

நியாயங்கள் பல பேசி
செல்ல சண்டை ஏராளம் நொடிக்கொருமுறை போட்டிட ஆசை.....

தூர பயணங்களில் எல்லாம்
உன் தோளில் தலை சாய்க்க ஆசை ......

உன் அழைப்புக்களை எல்லாம் தவற விடாமல் மணிக்கணக்காய் கதை பேசிட ஆசை.....

என் கைகளால் உனக்கு அறுசுவை உணவுகள் பரிமாறிட ஆசை ......

நம் சிறிய வீட்டில் நினைவுகளை நிறைத்து ஏகாந்தமாய்
இல்லறக் காதல் புரிய ஆசை.....

நம் வாழ்வுக்கு இலக்கணமாய் நம் மகவுகளை என்னுள் சுமந்திட ஆசை.....

உன் சின்னச்சின்ன ஆசைகளை கூட என்
ஆசைகளாய் ஏற்று நிறைவேற்றிட ஆசை......

என் வலு குறைந்திடும் நேரங்களிலெல்லாம்
உன் அணைப்பில் இருந்திட ஆசை......

நரையேறிய என் இறுதி
கணங்களில் உன் மடியில் என் உயிர் தொலைந்திட ஆசை.......


© kavi kavya