...

7 views

என்ன பிடிக்குமா
பித்தாய் இருந்தாலும் சரி
பிடிவாதம் பிடித்தாலும் சரி

முல்லை மலராய் அனைந்தாலும் சரி
முல்லாய் குத்தினாலும் சரி

கை பிடித்து பேசினாலும் சரி
பிடி கொடுக்காமல் பேசினாலும் சரி

கோபத்தில் திட்டினாலும் சரி
மோகத்தில் முட்டினாலும் சரி

காதலில் என்னை பறக்க
விட்டாலூம் சரி
கண்ணீரில் மிதக்க விட்டாலும் சரி

விதவிதமாய் ஆக்கி கொடுத்தாலும் சரி
வீம்பிற்கு அடுப்பை
மற்ற வைக்கமால்
இருந்தாலும் சரி

என் உலகமே நீ தான்
மாமா என்றாலும் சரி
உன்னுடன் இருக்கவே
பிடிக்கவில்லை
என்றாலும் சரி

நீ எப்படி இருந்தாலும் சரி
உன்னை மட்டும் தான்டி
பிடிக்கும் என் கைப்பிடி
அளவு இதயத்திற்கு

நீ இருக்கும்
வரை மட்டும் அல்ல
நான் இறக்கும் வரை