...

11 views

உயிர் 🤍உறவே
விலகி போய் நிற்கும் வீம்பு விடைதெரியா கோபம் இம்மேனும் முன் முந்திக்கொள்ளும் மௌனம் முழங்கிடும் முடிவுறியா மூழ்கி உளக் கிடங்கை ஊதி விட்டு தூபமாம் துதியில் துளைத்து துவண்டு தலை திருப்பிடா கொன்றை மலர் தோட்டம் தொடங்கும் வாடிய வதனமோ இமை இருட்டிய மைதிடல் கோடல் போல் ஒதுங்கி ஓரப்பார்வையில் ஓயாமல் சதிராடும் சதிகாரி கற்றை குழல்களும் கொஞ்சி குலவு கொட்டியது கொடிசை
கடிப்பினையாட்டம் தலை சிலுப்பலில் முறுக்கி கொண்டது ஓரிரு மயிரிலை சிக்கி கொண்டு விடுபட முடியாது சுற்றி இருந்தது இருந்திடினும் தன்னவளின் செய்கை சிறுபிள்ளை கோபமாகவே கருதி புன்னகையை வாயிற்குள்ளே அடக்கியப்படி ககனத்தின் கனிந்த பார்வையில் முகிலவளின் முணு
முணுப்பு அடங்கிய பாடு இல்லையே
அடங்கா ராட்சசி 🤍
© Ash(ஈசன் )