...

7 views

அன்பின் விதை!
கீச் கீச் இனிமையான இசையினைக் கேட்டு தூக்கம் கலைந்தாலும் எழ மனமில்லாமல் இருக்கும் சோம்பல் நிறைந்த காலை வேலையில்!

கையில் தேனீர் கோப்பையுடன் தன் அன்பையும் சேர்த்து எழுப்பும் அம்மா!

அவன் இன்னும் சிறிது நேரம் உறங்கட்டும் விடுடி என்று அதட்டும் அப்பாவின் பாசம்!

வாழ்வில் எதையோ சாதித்தை போன்ற மகிழ்ச்சியில் என் வருகையினை தெருவெங்கும் சொல்லி துல்லி விளையாடும் அன்பு தங்கை!

அண்ணன் வந்துட்டாறா? எழுப்பி விடு அம்மா என உரிமையோடு அழைக்கும் உடன் பிறவா தம்பிகள்!

தன் பிள்ளைகளை போன்று என் நலனை விசாரிக்கும் சொந்த பந்தங்கள் என
அனைத்து விதமான அன்பினை நான் எங்கே காண்பேன்?

நான் பிறந்த என் சொந்த மண்ணினைத் தவிர!