...

7 views

என் கீதையின் ராதை
மலரே ! உன் முகம் கண்டேன் ஒரு நொடி,
மயங்கி போகும் மாயம் என்னடி,
நிலவே மௌனம் மட்டும் உண்ணில் நான் கண்டேன், உன் குரல் கேட்கும் வரை, இந்த குயில் தான் உன் குரலில் மயக்கம் கொண்டதோ, மழை மேகம் சூழ நீ நினைந்திடும் அழகில் நானும் தோற்றேன், மயிலும் என் பின்னே மறைந்து இருக்க, உன் அழகினை காண தான் இதனை நாள் காத்திருந்தேன் போல், வெள்ளி நிலவே நதியோரம் மதி இழந்து மனம் யாவும் உன்னை நினைத்திருக்க, விழி எங்கும் உன்னை தேடி, மௌன பாசை பேசாதே,
இங்கே யாவும் எனக்கு புதிதாய்,
தேவலோகத்தல் ராம்பையும் ஊர்வாசியும் மேனகையும் உன் அழகில் மயங்கி போவார்கள், நானும் தான்
இத்தனை பேரழகா இந்த பூலோகத்தில்,
அந்த பிரம்மனும் மறந்து இருப்பான் தன் கற்பனையை உன்னை வடித்த பின்,
சிலையும் உன்னை கண்டு காதல் கொள்கிறதே.
என் எழுத்தும் உன் பிடியில் என்னை நானே தொலைத்த பின் எதை தேடி செல்வன் அன்பே உன்னை தவிர.
என்னுள் இருக்கும் கீதையில் என் ராதை நீயடி
© அருள்மொழி வேந்தன்