...

6 views

மீண்டும் கருவுறும் அடர்வனம்...
நிலவு விழுங்கப்பட்ட
முழுமையான இரவு...

மின்மினிகளுக்குத்தான்
எத்தனைக் கொண்டாட்டம்...

வெறிச்சோடி கிடந்தது வானம்...

நட்சத்திரங்கள்,
வனத்தின் தனிமையை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது...

மோகம் கொண்டு திரிந்த கார்மேகம்
அடர்வனத்தின் அற்புத வனப்பில் மயங்கி...

அப்பொழுதே கந்தர்வமணம் கொண்டு அத்தனைக் காதலையும் அன்றிரவே கொட்டித் தீர்த்துவிட்டு அரவமின்றிச் சென்றிருந்தது...

அது சென்றதும்...

பிரிவு தாளாமல்
அழுது அழுது
கோடி இலைகளால்
கண்ணீர்
சொட்டிக் கொண்டிருந்தது
அப்பெண்வனம்...

பாவம் அதற்குள்ளும் உண்டல்லவா பெண்மனம்...

நாளை கருமுட்டைகள் கணத்துவிடும்...

பின் பெருங்காட்டின் பச்சைக்குழந்தைகள்
மண் பிளந்துவெளிவரும்...

மலை முகடுகளில்
முலைப்பால் வழியும்....

பெருங்காடு வளரும்...

பெண்மை தளைக்கும்...

அடர்வன இடுக்குகள் எல்லாம் அல்குலாகும்...

அதனருகே
மாதவிடாயாய் அருவி கொட்டும்...

பெண்மை பூக்கும்...

அடர்வனம் முழுவதும் அரசாளும்...

அடுத்தொரு நாள் வரும்...

கார்மேகம் திரும்பி வரும்...

காணாத காதல் கொள்ளும்...

கந்தர்வமணம் புரியும்...

கானகமும் வானகமும் கலக்கும்...

அடர்வனம் மீண்டும் கருவுறும்...

- முத்தரசு மகாலிங்கம்©


© Mutharasu Mahalingam