...

4 views

தீப ஒளி நல்வாழ்த்துகள்
🎉தீபாவளியின் சிறப்புகள்...!!🎈🎉
🎉 தீபாவளி ஒளி நிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.

🎉 அதிகாலை கங்கா ஸ்நானம், படபடவென வெடிக்கும் பட்டாசுகள், புத்தாடைகள், நாவில் ஊற வைக்கும் பலகாரங்கள் இவை மட்டுமின்றி செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் தான்.

தீபாவளி வழிபாடுகள் :

🌟 லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

🌟 தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிக மிக சிறப்பு வாய்ந்தது. குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

🌟 தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.

🌟 தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்க வேண்டும்.

👆👆👆
🌟 தீபாவளி அன்று குலதெய்வ கோவிலிற்கு சென்று வாருங்கள்.

🌟 தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

🌟 தல தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟 தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :

🌟 புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமும், வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.

🌟 தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் உண்டாகும்.

🌟 பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.

🎇👪தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்🎇👪