...

6 views

அவளின் சிகையழகு..
அவள் சிகை அள்ளி
திரும்பும் போது..
அந்த அழகை கண்டு
சிலிர்த்து போகிறேன்..
சிதறி தான் கிடக்கிறேன்..
அவளின் காந்த விழியழகை
கண்டு மனம்குளிரலாமென்று..

எத்தனை அழகு..
எத்தனை போராட்டம்..
அவளுக்கும் இயற்கைக்கும்..
இயற்கையின் அழகை
குறைத்து காட்டுபவள்
இவளே.. இவளழகால்..
இயற்கையில் இயற்கையினூடே..

மயிலை கண்டு
மான்பாய் கூறவேண்டும்..
மதிகெட்ட மயிலே..
நீயே பேரழகு என்று
நினைந்து கர்வமுறாதே..
மயிலிறகை போன்ற
கார்கூந்தல் காரியவள்..

கணப்பொழுதில் உன்
கர்வமதை கலைக்க
துணிந்தவள்.. திரும்பி
அவள் ஒரு பார்வை
பார்க்க.. திக்கு தெரியாமல்
போகுமுந்தன் அழகின்
கர்வமதும்.. அவள் முன்னே..

மானை கண்டு
மாட்சியுடன் விளக்க வேண்டும்..
மாதவியவள் எழில்கொஞ்சும்
எடுப்பான நடையழகை..
மானே உன் நடையழகே
என்று மதியவேளை வரை
நினைத்திருந்தேன்..

மானசியை மதிவரும்
பொன்னான நேரமதில்
பின்செல்லும் போக்கில்
நித்தமாய் கண்ட நொடி..
நடையும் கூந்தலின் குறுக்கு
நெடுக்கான ஆட்டமும் எழிலும்
எண்ணத்தையும் என்னையும்..

எண்ணும் நொடியில்
ஏராளமாய் மாற்றி போட்டது..
அந்த நொடியே..அந்த கணமே..
மயிலாகவும் மானாகவும்
மாறிபோனாளவள்.. மதியே
விதியென்று அவள் நடையின்
பின்செல்கின்றது.. நானும்தான்..

© CG Kumaran