...

8 views

பாப்பா பாட்டு
காகம் நிறம் கருப்பு
காட்டாதே யாரிடமும் வெறுப்பு
வானின் நிறம் நீலம்
வாசலில் போடு கோலம்
பாலில் நிறம் வெள்ளை
பாகுபாடு நம்மிடம் இல்லை
மங்கல நிறம் மஞ்சள்
மாலையில் ஆடு ஊஞ்சல்
வயலின் நிறம் பசுமை
வறியவரின் வாழ்க்கை வெறுமை
குருதியின் நிறம் சிவப்பு
குருவை வணங்கினால் உவப்பு
கத்திரி நிறம் ஊதா
கண் கண்ட தெய்வம் மாதா


© சரவிபி ரோசிசந்திரா